Posts

காப்பிய தமிழ்

வாலி இராமனை இகழ்ந்து பேசுதல் 321 கண்ணுற்றான் வாலி நீலக் கார்முகில் கமலம் பூத்து மண்ணுற்று வரிவில் ஏந்தி வருவதே போலும் மாலைப் புண்ணுற்ற தனைய சோரிப் பொறியொடும் பொடிப்ப நோக்கி எண்ணுற்றாய் என்செய் தாய்என்று ஏசுவான் இயம்ப லுற்றான். தெளிவுரை:- நீலமேகம் செந்தாமரை மலர் பூத்து நிலவுலகில் வந்து கட்டமைந்த வில் ஏந்தி வருவதைப் போன்று திருமாலின் திரு அவதாரமான இராமபிரான் எதிரே வரக்கண்ட வாலி, புண்ணிலிருந்து வெளிப்படுகின்ற செங்குருதிபோன்று கண்கள் சிவக்க நெருப்புப்பொறி வீசுவதைப் போன்று நோக்கி, “நீ என்ன செயலைச் செய்தனை என்று பழித்து வசைமொழிகளைக் கூறத் தொடங்கினான் ஈண்டு இராமனின் கரிய வண்ணமும் கண், வாய், கை, கால், உந்தி, ஆகியவற்றின் செந்தாமரையன்ன வண்ணமும் கொண்டு கார்முகில் கமலம் பூத்து மண்ணுற்று" என, உவமித்துக் கூறப்பட்டது. இராமபிரான் திருமாலின் அவதாரம் ஆனதால் "மால்" என இவண் உணர்த்தப் பெற்றது. இராமபிரானைச் சூரிய குலத்தில் தோன்றிய மனிதப் பிறவியாகவே வாலி கருதியமையொட்டிச் "சொல்லறம் துறந்திலாத சூரியன்மரபும் தொல்லை நல்வறம் துறந்தது' எனப் (பாடல் வ. எண். 318) புகன்றனன் என்க. சோரி இரத்தம் ப...